செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வாவ்ரிங்கா, அஸரென்கா தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.#FrenchOpen

மாலை மலர்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 2-6, 6-3, 6-4, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் குல்லெர்மோ கார்சியா லோபெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பன் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலை சேர்ந்த தகுதி சுற்று வீரர் ரோஜரியோ டுத்ரா சில்வாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீரர் இல்வா இவாஷ்காவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.