செய்திகள்

மத்திய பணியாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மோடிக்கு அன்னாஹசாரே கடிதம்

மத்திய பணியாளர் சார்பில் குரூப்-1, 2 தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை, சமூகஆர்வலர் அன்னாஹசாரே நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மாலை மலர்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.) சார்பில் குரூப்-1, 2 தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதை கண்டித்து டெல்லியில் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.