செய்திகள்

வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் அறிவிப்பு

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார்.

விருதுநகர்:

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக திரண்டன. கட்டுரை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக வைரமுத்து அறிவித்தார். இருந்தும், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கூறினர்.

கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணா விரதத்தினைக் கைவிட்டார்.  

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து மீண்டும் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் அறிவித்துள்ளார்.