செய்திகள்

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருகை

இலங்கை அதிபர் சிறிசேனா, திருப்பதிக்கு நாளை வருகிறார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்கிறார்கள்.

திருமலை:

இலங்கை அதிபர் சிறிசேனா, திருப்பதிக்கு நாளை வருகிறார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்கிறார்கள். திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நாளை இரவு அதிபர் சிறிசேனா தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் (8-ந்தேதி) காலை சிறப்பு தரிசன சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் அவரை அமர வைத்து, ஏழுமலையானின் பிரசாதம், 2018-ம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்குகிறார்கள்.

இலங்கை அதிபரின் வருகையையொட்டி, திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT