செய்திகள்

காற்று மாசுபாடு காரணமாக ‘மாஸ்க்’ அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்

தலைநகர் டெல்லியில் கடும் காற்றுமாசுபாடு நிலவுவதால் அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக ‘மாஸ்க்’ அணிந்து விளையாடி வருகின்றனர்.

டெல்லி:

தலைநகர் டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது. வாகனம் மற்றும் தொழி்ற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்துள்ளது.

இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பீல்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT