செய்திகள்

முதல்வர் அலுவலக உத்தரவின் பேரில் ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது - ஆர்.டி.ஐ. தகவல்

மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி அலுவலகத்தின் உத்தரவின் பேரிலேயே நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என ஆர்.டி.ஐ மூலம் தெரிய வந்துள்ளது. #Sridevi

மாலை மலர்

மும்பை:

மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அனில் கல்காலி என்பவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்தது யார் என தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம் இன்று பதிலளித்துள்ளது. அதில், முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரிலேயே நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி மும்பை நகராட்சி கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இதற்கான அரசு உத்தரவை பெற்றுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 41 பேருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல் மந்திரிகளான விலாஸ்ராவ் தேஷ்முக், ஏ.ஆர்.அந்துலே மற்றும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உள்பட பல முக்கிய பிரபலங்களும் அடங்குவார்கள் என தெரிவித்துள்ளது. #Sridevi #Tamilnews