இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதாவது, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதற்கிடையே, இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பதிவான வாக்குச்சாவடிகளை பாதுகாக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடக்கும் 16 வது நாடாளுமன்ற தேர்தல் இது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான 225 எம்பிக்களில் 196 பேரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.