கொழும்பு:
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. தேவைப்பட்டால், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் 12 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலை தொடர்ந்து, வருகிற 20-ந் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.