முத்தையா முரளீதரன் 
செய்திகள்

சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரன் வடக்கு மாகாணம் கவர்னராக நியமனம்

இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளீதரன் வடக்கு மாகாணம் கவர்னராக நியமனம் செய்யப்பட இருக்கிறார்.

மாலை மலர்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே முரளீதரனை வடக்கு மாகாணம் கவர்னராக பொறுப்பேற்கும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர் கவர்னர் பதவியை ஏற்கலாம் எனத்தெரிகிறது.

47 வயதாகும் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.