செய்திகள்

உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts

மாலை மலர்

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.