லசித் மலிங்கா 
செய்திகள்

2020 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது: மலிங்கா

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் மலிங்கா, 2020 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இதனால் உலகக்கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். முதல் ஒருநாள் போட்டி இலங்கை பிரேமதாசா மைதானத்தில் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டியோடு அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லசித் மலிங்கா கூறுகையில் ‘‘வெள்ளிக்கிழமை என்னுடைய கடைசி ஒருநாள் போட்டி. நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியை நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள். முடிந்தால், நேரில் வந்து போட்டியை பார்க்கவும்.