செய்திகள்

ஹம்பன்தோடா துறைமுக திட்டம்: சீனாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்

நீண்டநாள் இழுபறிக்குப் பிறகு இலங்கை-சீனா இடையே ஹம்பன்தோடா துறைமுகத் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

மாலை மலர்

இலங்கையின் ஹம்பன்தோடா பகுதியில் சீனாவின் பெரும்பங்களிப்புடன் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்தன.

இதையடுத்து இந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும், வணிக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. திருத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சீன நிறுவனம் ஹம்பன்தோடா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுக்கும். துறைமுகத்தையொட்டி 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி தொழிற்சாலை மண்டலம் உருவாக்கவும் முடிவாகி உள்ளது. இதனால் துறைமுகம் அருகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.