செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இரங்கல்

உடல்நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு இலங்கை அதிபர் மைத்ரிமால சிறிசேனா அனுதாபம் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்

மாலை மலர்

சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.