செய்திகள்

வெங்கடாஜலபதியை தரிசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்தார்

ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் திருமலை வந்தடைந்தார். #SriLankaPM #RanilWickremesinghe #Tirumalahillsdarshan

இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.

அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை திருமலை வந்தடைந்தார்.