செய்திகள்

பாகிஸ்தானுக்கு, இலங்கை ராணுவ தளபதி பாராட்டு

விடுதலைப்புலிகளை அழிக்க உதவியாக இருந்த பாகிஸ்தானுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன் என்று பாகிஸ்தான் தளபதியிடம் இலங்கை தளபதி டிசில்வா தெரிவித்தார்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்த விடுதலை புலிகளை ஒடுக்க முடியாமல் இலங்கை ராணுவம் தத்தளித்து கொண்டு இருந்த நிலையில் பல நாடுகளின் ராணுவமும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தது.

இதன் காரணமாகத்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலிகளை ஒழிக்க முடிந்தது. இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்த நாடுகளில் பாகிஸ்தான் முக்கியமானதாக இருந்தது.

இலங்கை ராணுவ தளபதி டிசில்வா தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்துக்கு சென்ற டிசில்வா அந்த நாட்டு ராணுவ தளபதி ஹாமர் ஜாவத் பச்வாவை சந்தித்து பேசினார்.

அப்போது விடுதலை புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்திய போரின் போது, உதவியாக இருந்த பாகிஸ்தானுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன் என்று பாகிஸ்தான் தளபதியிடம் இலங்கை தளபதி டிசில்வா தெரிவித்தார்.