செய்திகள்

இலங்கை: புதிய ராணுவ தளபதியாக மகேஷ் சேனநாயகே நியமனம்

இலங்கை நாட்டு ராணுவத்தின் புதிய தளபதியாக மகேஷ் சேனநாயகே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார்.

மாலை மலர்

இலங்கை ராணுவ தளபதியாக இருந்த கிறிஷாந்தா டி சில்வா சமீபத்தில் அந்நாட்டின் முப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து, கடந்த ஒருவார காலமாக ராணுவ தளபதிக்கான பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை கமாண்டராக பணியாற்றி வந்த மகேஷ் சேனநாயகே என்பவரை அந்நாட்டின் புதிய தளபதியாக நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பிரபல ராணுவப் பள்ளியில் போர்க்கலை தொடர்பாக பயின்று பட்டம் பெற்றுள்ள மகேஷ் சேனநாயகே, புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முன்னர் பொறியியல் பட்டம் பெற்றார்.

இலங்கை ராணுவத்தின் எலைட் படைப்பிரிவில் பணியாற்றிவந்த இவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் லெப்டினன்ட் கமாண்டராக பதவி உயர்வு பெற்ற இவர்  என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவரது நியமனம் தவிர இலங்கை அரசின் முக்கிய பொறுப்புகளில் புதிய நபர்களை நியமித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கிழக்கு மாகாண கவர்னராக பதவி வகித்த ஆஸ்ட்டின் பெர்னான்டோ, தற்போது அதிபரின் நேரடி செயலாளர் பதவியில்  நியமிக்கப்பட்டுள்ளார்.