செய்திகள்

தமிழக சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம்

தமிழக சட்டசபை செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சபாநாயகர் தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை:

தமிழக சட்டசபை செயலாளராக இருந்த பூபதி கடந்த 28-ந்தேதி ஓய்வு பெற்றார். சிறப்பு செயலாளர் அந்தஸ்தில் பூபதியிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய கே.சீனிவாசன் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சபாநாயகர் தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சீனிவாசனை விட பணியில் மூத்த அதிகாரிகளாக பணியாற்றும் சட்டசபையின் கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணைச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நிலுவையில் உள்ள இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதனால் சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசனின் நியமனம் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews