செய்திகள்

முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை: ஆசிய கோப்பையில் ஸ்ரீஜேஷ் விளையாடுவது சந்தேகம்

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதனால் அவர் ஐந்து மாதம் ஹாக்கியில் இருந்து ஒதுங்கியிருக்க உள்ளார்.

மாலை மலர்

இந்திய அணியின் முன்னணி கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ் கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் முழுத்தகுதி பெற ஐந்து மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாகாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், டிசம்பர் மாதம் புவனேஸ்வரில் நடக்கும் ஹாக்கி உலக லீக் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.