செய்திகள்

காமன்வெல்த் போட்டி ஸ்குவாஷ் - காலிறுதியில் ஜோஷ்னா- பல்லிகல், விக்ரம் மல்கோத்ரா அவுட்

காமன்வெல்த் போட்டி ஸ்குவாஷில் ஜோஷ்னா காலிறுதிக்கு முன்னேறிய நிலையில் தீபிகா பல்லிகல், விக்ரம் மல்கோத்ரா தோல்வியடைந்தனர். #CWG2018 #GC2018

மாலை மலர்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. ஸ்குவாஷ் போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் விக்ரம் மல்கோத்ரா இங்கிலாந்தின் நிக் மேத்யூவை எதிர்கொண்டார். இதில் முதல் கேம்ஸை 6-11 என இழந்த மல்கோத்ரா, 2-வது கேம்ஸை 11-6 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளையும் முறையே 6-11, 6-11 என இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் தமிகா சக்ஸ்பி-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோஷ்னா 3-0 என எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் தீபிகா பல்லிகல் அதிர்ச்சிகரமாக 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் நியூசிலாந்து வீராங்கனை ஜூலி கிங்கை எதிர்கொள்கிறார்.