செய்திகள்

தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் - ரன்வே விளக்குகள் சேதம்

பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கியபோது ரன்வேயை விட்டு விலகி சென்றதால், ரன்வே விளக்குகள் சேதம் அடைந்தன.

பெங்களூரு:

ஐதராபாத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. தரையிறங்க அனுமதி கிடைத்ததும் குறிப்பிட்ட ரன்வேயில் விமானம் தரையிறங்கியது.

ரன்வேயில் ஓடியபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயின் மையப்பகுதியை விட்டு விலகி இடதுபுறமாக சென்றது. பின்னர் விமானி சாமர்த்தியமாக மையப்பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தினார். எனினும் விமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

ஆனால், விமானம் இலக்கை விட்டு விலகி ஓடியதால் ரன்வேயின் விளிம்பு விளக்குகள் சேதமடைந்தன. இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. ரன்வே மூடப்பட்டதால், 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. கோவை மற்றும் திருச்சிக்கு தலா ஒரு விமானம் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT