செய்திகள்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாளை இயக்கம்

மங்களூரு - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரெயில் (எண்:06060) நாளை இயக்கப்படுகிறது.

மாலை மலர்

சேலம்:

இந்த ரெயில் நாளை (12-ந் தேதி) இரவு 8.15 மணிக்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் (13-ந் தேதி) பகல் 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரெயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, திரூர், சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நடந்து வருகிறது.