சஸ்பெண்டு 
செய்திகள்

சேலத்தில் ரோந்து பணியின்போது குடிபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

சேலத்தில் ரோந்து பணியின்போது குடிபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். சம்பவத்தன்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேற்கு சரக உதவி ஆணையாளர் பூபதிராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ராஜ்குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது குடித்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பூபதிராஜன் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை சஸ்பெண்டு செய்து கமி‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT