செய்திகள்

பாக். முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Musharraf

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப் அரசியல் நெருக்கடி காரணமாக அவசர நிலை பிரகடணம் செய்தார். இதற்கு எதிராக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவரை கைது செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. தற்போது துபாயில் இருக்கும் 

முஷாரப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், பிரிட்டன் மற்றும் துபாயில் உள்ள அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

கடந்த முறை உத்தரவிட்டும் முஷாரப்பை நாடு கடத்துவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், முஷாரப்பின் சொத்து பட்டியலை கேட்டும் அரசு அளிக்கவில்லை என கோபமாக தெரிவித்தனர்.

அடுத்த விசாரணையின் போது, துபாய் அரசுடன் ஒப்பந்தம் செய்து முஷாரப்பை நாடு கடத்துவதற்கு தேவையான எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை தாக்கல் செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைது நெருக்கடி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முஷாரப் பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #Musharraf #TamilNews