புதுடெல்லி:
இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் லுங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. காற்றோற்றமான இந்த உடை பலரின் விருப்பத்தேர்வாக உள்ளது. இந்நிலையில், இந்திய சந்தையில் கால் பதித்துள்ள ஸ்பெயினைச் சேர்ந்த ஸரா என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் லுங்கி போன்ற ஸ்கர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 90 ரூபாய்க்கு லுங்கிகள் கிடைக்கும் நிலையில், ஸரா நிறுவனத்தின் லுங்கியின் விலை ரூ.4990 ஆக உள்ளது. ஆன்லைனில் இந்த ஆடையை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்நிலையில், ஸராவின் ஸ்கர்ட் மற்றும் இந்திய லுங்கிகளை ஒப்பிட்டு ட்விட்டரில் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.