செய்திகள்

மணிப்பூரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் போட்டி

பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #MulayamSingh #SamajwadiParty

மாலை மலர்

லக்னோ:

பாராளுமன்ற தேர்தல் அட்டவணை ஓரிரு நாளில் வெளியாக உள்ள நிலையில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அந்த 15 தொகுதிகளில் உத்தரபிரதேசத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு காங்கிரஸ் அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதை கண்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ்யாதவும் உடனடியாக சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்தார். அதன்படி லக்னோவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. மணிப்பூரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர யாதவ் பதன் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொகுதியில் இருந்து 3 முறை போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலேஷ் யாதவின் உறவினரான அக்சைக்கு பைரோசபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. #LSPolls #MulayamSingh #SamajwadiParty