எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் அஞ்சலி 
செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்ததை அடுத்து ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் அருகே அவருடைய உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அவருடைய பாடல்களைப் பாடி தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர் சங்க நிர்வாகிகள் கவுரவ ஆலோசகர் பாலா, தலைவர் கருணாகரன் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பிச்சைமணி, இணைச் செயலாளர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, துணை ஒருங்கிணைப்பாளர் பொன்முடி, மகளிர் அணி செயலாளர் உதயா மற்றும் சங்க நிர்வாகிகள் ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.