பனைவிதை 
செய்திகள்

வாணியம்பாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் பனைவிதை விதைக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் பனைவிதை விதைக்கும் பணியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி, அண்ணாநகர், வெலத்திகமாணிபெண்டா மலை பகுதியில் 10 ஆயிரம் பனை விதை விதைப்பது மற்றும் செடிகள் நடும் பணி, விதை பறவைகள் அமைப்பின் சார்பில் மலையடிவாரத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு 10 ஆயிரம் பனை விதை விதைக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, செடிகளையும் நட்டார்.

நிகழ்சியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம், வாணியம்பாடி தாசில்தார் (பொறுப்பு) செண்பகவள்ளி, நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துச்செல்வி, பாலாறு வெங்கடேசன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.