செய்திகள்

சவுகார்பேட்டை அருகே கடையில் திருடிய வாலிபர் கைது

சவுகார்பேட்டை அருகே கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் பேன்சி பொருட்கள் மொத்த விலைக் கடை வைத்திருப்பவர் விஜயன். இவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த 1 வாரத்தில் கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை திருடினார். கடந்த 3-ந்தேதி அவர் பணத்துடன் மாயமாகி விட்டார்.

இது தொடர்பாக பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர், முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பரத்குமாரை தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானுக்கு ரெயில் ஏற சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT