செய்திகள்

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசாருக்கு அபராதம்: தெற்கு ரெயில்வே

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே டிஜிபி சென்னை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ரெயில்களில் தமிழக போலீசார் டிக்கெட் ஏதுமின்றி பயணம் செய்கிறார்கள் என்று பயணிகள் தெற்கு ரெயில்வேயில் புகார் அளித்தனர். குறிப்பாக ஐ.டி. கார்டுகளை காண்பித்து முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பில் பயணம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், தெற்கு ரெயில்வே டி.ஜி.பி. போலீஷ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘தெற்கு ரெயில்வே விதிமுறைப்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT