தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுகிறது. எனவே நாளை மதியம் 2.15 மணி முதல் 3.15 மணி வரை 1 மணி நேரமும் மற்றும் நாளை இரவு 11.45 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 1.20 மணி வரை 1 மணி நேரம் 35 நிமிடங்களும் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது.