விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக, வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் தென்கொரியாமிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்து வந்தது.