செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா?: பேச்சுவார்த்தைக்கு தென்கொரியா அழைப்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.

மாலை மலர்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார். இது தொடர்பாக இரு நாடுகளும் விரைவாக ஆலோசனை நடத்தி சாத்தியக்கூறுகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிம் கருத்தை வரவேற்றுள்ள தென்கொரிய அதிபர் முன் ஜே-இன், உடைந்த உறவை முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறியுள்ளார். இன்று மந்திரி சபையில் பேசிய ஜே-இன், வடகொரியாவின் அணு சோதனைகள் இரு நாடுகள் இடையேயான உறவை பாதிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை நடக்க உள்ள பகுதி