செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். #SouthAfricaElection #CyrilRamaphosa

மாலை மலர்

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவ்வகையில் மே 8-ம் தேதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கின.

இந்நிலையில், மே 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அதிபர் சிரில் ராமபோசா முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போடுவதற்கு ஏதுவாக, மே 8-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.