செய்திகள்

மும்மூர்த்திகள் இருப்பதால் எந்த ஆடுகளமாக இருந்தாலும் தயார்- டு பிளிசிஸ்

இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA

மாலை மலர்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.

எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.