செய்திகள்

சோனி எக்ஸ்பீரியா R1 மற்றும் R1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சோனி மொபைல் நிறுவனத்தின் எக்ஸ்பீரியா R1 மற்றும் எக்ஸ்பீரியா R1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சோனி மொபைல் நிறுவனத்தின் எக்ஸ்பீரியா R1 மற்றும் எக்ஸ்பீரியா R1 பிளஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5.2 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.

இரண்டு சோனி ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் ஸ்லாட், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா R1 மற்றும் R1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 2 ஜிபி (R1) / 3 ஜிபி ரேம் (R1 பிளஸ்)
- 16 ஜிபி (R1) / 32 ஜிபி (R1 பிளஸ்) இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 2620 எம்ஏஎச் பேட்டரி

புதிய சோனி எக்ஸ்பீரியா R1 ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், எக்ஸ்பீரியா R1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சாதனங்களும் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.