சோனியா காந்தி - மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி வாழ்த்து

பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் பாஜக தொண்டர்கள் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,  பிரதமர் மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக #HappyBdayPMModi என ஹேஷ்டாக்கினை பதிவிட்டு, பிரதமர் மோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.