செய்திகள்

சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்றிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா நேற்று முன்தினம் சிம்லா சென்றிருந்தார். சிம்லாவில் சுமார் 14 கி.மீ. தொலைவில் பிரியங்கா சொகுசு பங்களா கட்டி வருகிறார். அந்த பங்களாவை பார்க்க சோனியா சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். #tamilnews