சோனியா காந்தி 
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு?

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்தது. 

மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசின் சில தலைவர்கள்  தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.