காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 
செய்திகள்

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவிற்கு சோனியா காந்தி இரங்கல்

முன்னாள் நிதி மந்திரி மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அருண்ஜெட்லி மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவையில் நீண்ட காலமாக இருந்தவர் அருண் ஜெட்லி, சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் மந்திரியாகவும் திகழ்ந்தவர். அவர் பொது மக்களுக்கு ஆற்றிய சேவை என்றும் நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.