ஆற்றில் தேடும் பணி தீவிரம் 
செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்எம் கிருஷ்ணா மருமகன் மாயம்

கபே காபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த் மாயமானார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்

பெங்களூரு,

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த். இவர் கபே காபி டே நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான வி.ஜி.சித்தார்த் மாயமாகியுள்ளார். சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் கூறியதால் ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரது தொலைபேசியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. 

இதற்கிடையே, கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.