செய்திகள்

கும்பகோணத்தில் தாயை அடித்து கொன்றதாக உறவினர் மீது மகன் புகார்

கும்பகோணம் அருகே தாயை அடித்து கொன்றதாக உறவினர் மீது மகன் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த கீழக்கொற்கை, அம்பேத்கார் நகர், பூக்கொல்லையை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ஆராயி (வயது60). நேற்று முன்தினம், இரவு தூக்குமாட்டி கொண்டதாக கூறி ஆராயியை அவரது தம்பி ஏழுமலை, கும்பகோணத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

பின்னர் ஆராயின் உடலை கீழக்கொற்கையிலுள்ள தனது வீட்டில் வைத்து இறுதிசடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆராயி மகள் உமா மற்றும் மகன் விஜய் ஆகியோர் தாய் ஆராயியை அடித்து உறவினரே கொலை செய்துள்ளார் என பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் போலீசார் ஆராயியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.