செய்திகள்

கோடை காலத்தில் ‘விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்’ - பிரதமர் மோடி வேண்டுகோள்

கோடை காலத்தில் விலங்குகள், பறவைகளின் தாகத்தை போக்க அனைவரும் தங்களது வீடுகளுக்கு முன்பாக பாத்திரங்களில் குடிநீரை நிரப்பி வையுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசும்போது, “பள்ளி பொதுத் தேர்வு, விடுமுறை காலம், தண்ணீர் சேமிப்பு போன்றவை பற்றி எனக்கு மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி உள்ளனர். குழந்தைகளும் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

குறிப்பாக கோடை காலத்தில் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் காணப்படும் சிக்கல் குறித்த கவலையுடன் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அவற்றின் தாகத்தை போக்க அனைவரும் தங்களது வீடுகளுக்கு முன்பாக பாத்திரங்களில் குடிநீரை நிரப்பி வையுங்கள். விலங்குகள், பறவைகளின் தாகம் தணியும்” என்றார். 

SCROLL FOR NEXT