செய்திகள்

சோலார் பேனல் மோசடி வழக்கு- சரிதாநாயர் ஆஜராகவில்லை

சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சரிதாநாயர் இன்று ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆஜராகவில்லை. #SarithaNair

மாலை மலர்

கோவை:

கோவை வடவள்ளி பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் ரூ. 31 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜே.எம். 6 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர், மேலாளர் ரவி ஆகியோரை இன்று ஆஜராகுமாறு நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டு இருந்தார். ஆனால் உடல் நிலை சரியில்லாததால் சரிதா நாயர் இன்று ஆஜராகவில்லை. 

மேலாளர் ரவி மட்டும் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரிதாநாயர், ரவி ஆகியோரை அடுத்த மாதம் 2-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டார். #tamilnews #SarithaNair