கோவை:
கேரளாவில் சோலார் பேனல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர் கோவை வடவள்ளி பகுதியில் சோலார் பேனல் நிறுவனம் நடத்தி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோசடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2009-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை மாஜிஸ்திரேட் 6-வது கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதன் மீதான விசாரணை இன்று வந்தது. சரிதாநாயர் அவரது மானேஜர் ரவி ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகள் யாரும் வராததால் வழக்கு விசாரணையை வரும் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.