இதன்பயனாக உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகள் அடுத்த மாதம் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் லாகூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சோஹைல் கான்
இந்நிலையில் உலக லெவன் அணிக்கெதிராக விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் டி20 அணியில் சோஹைல் கான் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-