அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 
செய்திகள்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு இதுவரை 1,705 ஏக்கர் கரும்பு பதிவு

நடப்பு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடந்தது.

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே  விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட கரும்பை அடிப்படையாக கொண்டு நடப்பு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடந்தது. 

இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக தற்போது கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை  810 ஏக்கர் கன்னி கரும்பும், 895 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1,705 ஏக்கர் பரப்புள்ள கரும்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT