கோவை:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 53) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக புதர்மறைவில் இருந்த பாம்பு ஒன்று, அவருடைய காலில் கடித்தது.
இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.