பெண் பலி 
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே பாம்பு கடித்து பெண் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் நாகூரான். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 60).

சம்பவத்தன்று இவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார் அப்போது திடீரென அவரை பாம்பு கடித்தது. இதில் வாயில் நுரைதள்ளியபடி முத்துலட்சுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக முத்துலட்சுமி இறந்தார்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT