செய்திகள்

தக்கோலம் அருகே பாம்பு கடித்து பெண் பலி

தக்கோலம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலியானார். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கோலம்:

தக்கோலம் அடுத்த கடம்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சித்தன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் கடந்த 26-ந் தேதி இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினார். அப்போது வீட்டினுள் நுழைந்த பாம்பு அவரை கடித்து விட்டது.

இயைடுத்து, கணவர் சித்தன் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக் காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.