செய்திகள்

பாபநாசம் அருகே பாம்பு கடித்து பெண் பலி

பாபநாசம் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே உள்ள மருவத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி பருத்தி வயலில் வேலை செய்தார்.

அப்போது புதரில் பதுங்கி இருந்த பாம்பு சரோஜாவின் வலது கணுக்காலில் கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சரோஜா பரிதாபமாக இறந்தார். இது பற்றி அரித்துவார மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.